Monday, 25 July 2016

ரயில்வே பயணிகள் இன்சுரன்ஸ் அறிமுகம் 2016

ஐஆர்சிடிசி(IRCTC) புதிய பயணிகள் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுக படுத்துகிறது. இதன்படி ஒரு பயணத்திற்கு ரூ. 2 வீதம் வசூலிக்கடும். இதன் மூலம் ரூ. 10 லட்சத்திற்கான காப்பீடு தொகையை பெறலாம் என மும்பை ரயில்வே மேலாளர் திரு.அருண்குமார் மனோச்சா தெரிவித்துள்ளார்.

Saturday, 23 July 2016

விமானத்தின் இயங்கும் நிலை தெரிந்துகொள்ள / Flight Live running status

விமானத்தின் இயங்கும் நிலை தெரிந்துகொள்ள

http://flightsearchapp.com/

பார்வை இழந்த இளைஞனின் சாதனை

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கண் பார்வை இழந்த இளைஞன் தற்போது 50 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உயர்ந்துள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரீ காந்த் போலோ ( வயது 24). ஏழை குடும்பத்தில் பிறந்த அவரது வாழ்க்கை ஒரு போராட்டமாக அமைந்தது. இதனால் எப்படியும் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என லட்சியம் வைத்தார். இதனால் 10 ம் வகுப்பில் 90 சதவீத மார்க்குகள் பெற்றார். இருப்பினும் அவருக்கு பிளஸ் 2வில் அறிவியல் படிப்பில் சேர அனுமதி கிடைக்கவில்லை. போராடி பிளஸ் 2 படிப்பில் 98 சதவீத மார்க்குகள் பெற்றார்.

ஐஐடி மற்றும் என்ஐ டியில் இவருக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து அவர் கடும் முயற்சியால் அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட்டில் இடம் கிடைத்தது. இவருக்கு உதவி தொகையும் கிடைத்தது.

படிப்புக்குப் பின் இந்தியா திரும்பிய அவர் போலோ இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். இதில் மாற்று திறனாளிகள் 60 சதவீதத்தினருக்கு வேலை வாய்ப்பு அளித்தார். தற்போது இந்த நிறுவனம் 50 கோடிக்கு வர்த்தகம் செய்கிறது. இந்நிறுவனத்தில் டாடா நிறுவனமும் முதலீடு செய்துள்ளது.

"என்னால் எதுவும் முடியாது என்று பலர் என்னை அவமதத்தினர். நான் சொல்கிறேன் என்னால் எதுவும் சாதிக்க முடியும் என்பதை நான் இந்த உலகத்திற்கு சொல்லி கொள்கிறேன் " என்றார்.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

சீனாவில் கனமழை : பலி 112 ஆனது

ஷங்காய் : சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 16 மில்லியன் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹீபை பகுதியில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக 72 பேர் பலியாகி உள்ளனர். 78 பேரை காணவில்லை. இதுவரை 50,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த மழை, வெள்ளத்திற்கு 8.6 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடாது கொட்டும் மழை காரணமாக 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 பில்லியன் யானுக்கும் மேல் நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

காபூல் பிரம்மாண்ட பேரணியில் குண்டுவெடிப்பு

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே பிரம்மாண்ட பேரணியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. காபூலில் ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக மின்சார லைனைக் கொண்டு செல்லக் கோரி இன்று பேரணி நடந்தது. அப்போது திடீரென்று இரண்டு குண்டுகள் வெடித்தன.
சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதால் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மனித வெடிகுண்டாக யாராவது வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

தயாசங்கர் சிங்கை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்க: வைகோ

மாயாவதியை இழிவாகப் பேசிய தயாசங்கர் சிங் மீது உ.பி.அரசு தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் மதவெறிக்கு ஊக்கம் தரப்படுகின்றது. அதனால், சாதிய வன்கொடுமைகள் தாண்டவமாடுகின்றன. அந்த வகையில்தான், உத்தரப் பிரதேசத்தில் நான்கு முறை முதல்வர் பதவி வகித்த, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கையாக விளங்குகின்ற மாயாவதியை கேவலமாகப் பேசி இழிவுபடுத்தி இருக்கின்றார், அம்மாநில பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங்.

தயாசங்கருக்கு மதிமுக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உத்தரப்பிரதேச அரசு தயாசங்கர் சிங் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து தயாசங்கர் சிங்கை கைது செய்து, கூண்டில் ஏற்றி, தண்டனை வழங்க வேண்டும்.

வகுப்புவாத வெறியர்களால் மரண பூமியாக்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இந்துத்துவ ஆதிக்கச் சக்திகளின் வெறியாட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. உனா கிராமத்தில் இறந்த பசு மாட்டின் தோலை உரித்தார்கள் என்று குற்றஞ்சாட்டி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மீது மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்களை காரில் கட்டி இழுத்துச் சென்று, காவல் நிலையத்தின் எதிரிலேயே கட்டி வைத்து இரும்புக் கம்பியால் அடித்துத் துன்புறுத்தி இருக்கின்றனர்.

மக்கள் கூட்டத்தில் வாழத் தகுதியற்ற இத்தகைய காட்டுமிராண்டிகள் மீது குஜராத் மாநில பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்.

பிரதமரின் சொந்த மாநிலத்தில்தான் பசுவதை என்ற பெயரால் இந்துத்துவா கும்பல் இந்த ரத்தக் களரியை நடத்தி இருக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் முகமது இக்லாக் என்ற இஸ்லாமியர் ஒருவரை பசுமாட்டு இறைச்சி வைத்து இருந்தார் என்று ஒரு கும்பல் அவரை அடித்து உதைத்துச் சித்திரவதை செய்து கொன்றனர். தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்று மத வெறியர்களால் கொல்லப்பட்ட இக்லாக் குடும்பத்தினர் மீதே உத்திரப்பிரதேச அரசு வழக்குத் தொடுத்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மதவெறி சக்திகள் வகுப்பு மோதல்களைத் தூண்டவும், எதிர்க்கருத்து உரைப்போரை ஒழித்துக்கட்டவும் ஒரு பெருந்திட்டம் வகுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுவதாகவே தோன்றுகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான், சிந்தனையாளர்களாக, சீர்திருத்தவாதிகளாக மதவாதத்திற்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்து வந்த நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த பன்சாரே போன்றோர் திட்டமிட்டு, ஒரே வகையான துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சாதி, மத வேற்றுமைகளைக் களைய வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய பாஜக அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை ஆர்.எஸ்.எஸ்.வழிநடத்துகிறது என்று பெருமையுடன் வெளிப்படையாகக் கூறி வருகின்றனர்.

இத்தகைய மதவெறி சக்திகளின் கொட்டம் அடக்கப்படாவிடில், உத்திரப்பிரதேசம், குஜராத் மட்டும் அன்றி, நாடு முழுவதும் சாதி மத மோதல்கள் வளரக்கூடிய ஒரு பெரும் கேடு சூழ்ந்து வருகின்றது.

எனவே, மத்திய அரசு இந்தப் பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்தி, சட்டப்படி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்; இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் நல்லிணக்கம் நிலவ உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

சிரியா துயரம்: போரின் வலியை உலகுக்கு உணர்த்த 'போகிமான் கோ' விளையாட்டை நாடிய கலைஞர்கள்!

உலக முழுவதும் உள்ள இளைஞர்கள் 'போகிமான் கோ' என்ற வீடியோ கேமில் வரும் பிக்காச்சூ (pikachu) கதாபத்திரத்தைப் பிடிக்க உயிரை பணயம் வைத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிரியாவை சேர்ந்த இருவர் 'போகிமான் கோ' புகழ் பிக்காச்சூவின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலையை பிற உலக நாடுகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கலைஞருமான காலித் அகில் 'போகிமான் கோ' வைப் பற்றி கேள்வியுற்று அவ்விளையாட்டை, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் வீதிகளில் விளையாடினால் எப்படியான சூழல் இருக்கும் என்பதை, பிற உலக நாடுகளின் கண்ணோட்டத்திற்கு கொண்செல்ல விரும்பியிருக்கிறார்.

இதனை அடுத்து, சிரியாவின் போர் பாதிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் 'போகிமான் கோ' கதாபாத்திரமான பிக்காச்சூவை நிறுத்தியிருக்கிறார் காலித்.

உதாரணத்துக்குப் போரினால் இடிந்த தனது வீட்டின் முன் அமர்ந்திருக்கும் சிறுவனின் பக்கத்தில் சோகம் படிந்த கண்களுடன் பிக்காச்சூ கதாப்பாத்திரம் அமர்ந்திருப்பது போல் செய்துள்ளா.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

காஷ்மீரில் ஆசிட்டால் தாக்கும் போராட்டக்காரர்கள்

புதுடில்லி : காஷ்மீரில் பயங்கரவாதி வானி என்கவுன்டரில் கொல்லப்பட்டதன் காரணமாக பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் தொடர் போராட்டம் காரணமாக 15வது நாளாக அங்கு பதற்றம் நிலவுகிறது.போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் இதுவரை 2200 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் தற்போது கற்களுக்கு பதிலாக ஆசிட் பாட்டில்களை ஆயுதமாக கொண்டு பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக துப்பாக்கியை பயன்படுத்த வேண்டி உள்ளது என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வாரங்களில் பாதுகாப்பு படையினரை நோக்கி 600 க்கும் மேலான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 15 முறை போலீஸ் ஸ்டேஷன்கள், செக்போஸ்ட், பாதுகாப்பு படை முகாம்கள் உள்ளிட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் 70 க்கும் மேற்பட்ட ஆயுதங்களையும் திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

போர் நினைவுச் சின்னத்தில் நிரந்தர தேசிய கொடி

சென்னை : மெட்ரோ திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.முன்னதாக சென்னை தீவுத்திடலில் உள்ள ராணுவ போர் நினைவுச் சின்னத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். போர் நினைவுச் சின்னத்தில் நிரந்தரமாக பறக்கக்கூடிய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராணுவ தென்மண்டல அதிகாரி ஜக்பர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போர் நினைவுச் சின்னத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள இந்த தேசிய கொடி 24 மணிநேரமும் பறக்க சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

துப்பாக்கிச்சூடு நடத்தியது 18 வயது இளைஞர்

மியூனிச் : ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரி ஹூபர்டஸ் ஆன்டிரே செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்தியவனும் ஒருவன். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் 18 வயதான ஜெர்மன்-ஈரானை சேர்ந்தவர். இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று சரியாக தெரியவில்லை.

வணிக வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் மெக்டெனால்ட் உணவு விடுதியில் அவர் தாக்குதல் நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

குஜராத்தை தொடர்ந்து பீகாரிலும் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

பாட்னா: குஜராத்தில் இறந்து போன பசுவின் தோலை உரித்ததற்காக தலித் வாலிபர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் பார்லி.,யில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த விவகாரம் முடிவுக்கு வருவதற்குள் பீகாரிலும் 2 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
முசாபர்பூர் மாவட்டத்திலுள்ள பபுடோலா பகுதியை சேர்ந்த தலித் வாலிபர்கள் இருவர், பைக் திருடியதாக அப்பகுதி பஞ்சாயத்து தலைவரின் அடியாட்களால் கடத்தி செல்லப்பட்டனர். பின்னர் அரவ்கள் இருவரையும் ஒரு அறையில் பூட்டி வைத்து மூங்கில் கம்புகளால் தாக்கி உள்ளனர். மேலும் அவர்கள் வாயில் அடியாட்கள் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 20ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பாரு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

வேலை தேடுவோருக்கு உதவ தேசிய வழிகாட்டி சேவை

பட்டப்படிப்பு முடித்தவுடன் பெரும்பாலானோரின் முதல் பணி வேலை தேடுவதே. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவது, நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்களை தேடுவது பட்டதாரிகளின் அன்றாட பணியாக மாறிவிடும்.

நாட்டில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி களில் கடந்த ஆண்டு 10 லட்சத் துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வந்தனர். தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரம் பேர். அவர்களுள் 80 சதவீதம் பேர் வேலை கிடைக் காமல் அவதிப்படுகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்கின்றன. ஆனால் அவர்களுக் கெல்லாம் வேலை கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர் சனமான உண்மை.

தேசிய வழிகாட்டி சேவை

அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் 5 சுமை தூக்குவோர் பணியிடங்களுக்காக அரசுத் தேர் வுக்கு 2,424 பேர் விண்ணப்பித்தனர். இந்தப் பணியில் சேர குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 4-ஆம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், எம்.ஃபில் முடித்தவர்கள் 5 பேர், முதுநிலை பட்டதாரிகள் 253 பேர் உள்பட 984 பேர் பட்டதாரிகள், 12-ம் வகுப்பு படித்தவர்கள் 605 பேர், 10-ம் வகுப்பு படித்தவர்கள் 282 பேர், அதற்கும் குறைவான பள்ளிப்படிப்பை முடித்த 177 பேர் என 2,424 பேர் விண்ணப் பித்திருந்தனர்.

இப்படி அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவை எனும் பிரிவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பிரத்யேக National Carrier Service (தேசிய வழிகாட்டி சேவை) இணைய தளத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது படித்த பட்டதாரிகளின் தகவல்கள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகங்களிலும் இந்த இணையத்தின் மூலம் இடம்பெறச் செய்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு, வேலை தரும் நிறுவனத்தில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும். அந்தத் தகவலைக் கொண்டு வேலை தேடுபவர் வேலை பெறலாம்.

பட்டதாரிகள் மட்டுமின்றி 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களும் தங்களுடைய கல்வித் தகுதியை இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். தாங்கள் என்ன மாதிரியான வேலையை, எந்தத் துறைகளில் தேடுகிறோம் என்பதை தெரிவித் தால் தொடர்புடைய அரசு மற் றும் தனியார் வேலைவாய்ப்பு களை விண்ணப்பதாரரின் செல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தகவலாக தருகிறார்கள்.

வேலை வழிகாட்டி பணி

இது தொடர்பாக கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரன் கூறியது:

படித்து முடித்த பட்டதாரிகளுக்கு அரசு பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களின் பணி தற்போது மாறி, தேசிய வேலை வழிகாட்டி பணி என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது. தமிழகத்தில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக தேசிய வழிகாட்டி சேவை எனும் பிரிவை ஏற்படுத்தி அதற்காக www.ncs.gov.in என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. படிப்பை முடித்தவர்கள் இந்த இணையதள முகவரி மூலம் தங்களுக்கென தனி கணக்கைத் தொடங்கி அதில் தங்களது படிப்பு விவரங்களையும், வேலை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் வேலைவாய்ப்புக் குறித்து தகவல் கள் அவரவர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும். இதேபோன்று வேலை தரும் தனியார் நிறுவனங்களும் இணை யத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற தகுதி வாய்ந்த நபரைத் தேர்வு செய்துகொள்ளலாம். அரசு சார்பில் இது செயல்படுவதால் நம்பகத்தன்மையுடன் கூடிய பணி கிடைக்கும்.

இணையத்தில் பதிவு செய்ய..

இதேபோன்று வெளிநாடு செல்வோரும் இந்த இணையத் தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அயல்நாட்டுப் பணிக்கு குறைந்த செலவில் பதிவு செய்து, நம்பகத் தன்மையுடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறலாம். இது தவிர உள்ளூர் சேவை, பணித்திறன் பயிற்சிகள், ஆலோசனைகள் உள்ளிட்டவற்றையும் பெறலாம்.

இந்த இணையத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, படிப்புச் சான்றிதழ் ஆகியவைக் கொண்டு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம் என்றார்.

இந்த NCS சேவை தொடர்பான விவரங்களை பெற 18004251514 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம். ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் பிராந்திய மொழிகளிலும் உரிய விளக்கம் தருகிறார்கள்.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

கோவில்பட்டி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

கோவில்பட்டி பள்ளி மாணவர், தேசிய விஞ்ஞானி விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, அப்துல்கலாம் பவுன்டேஷன், ரஷ்யன் கலை மற்றும் அறிவியல் அமைப்பு சார்பில் இளம் விஞ்ஞானிக்கான தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வுக்கு அகில இந்திய அளவில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படைப்புகளை பதிவு செய்தனர். இதில், 90 மாணவர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

இவர்களில், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவசூர்யா, சூரிய ஒளி பேட்டரியில் இயங்கும் சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தக் கூடிய டிராக்டரை வடிவமைத்து தேர்வுக்கு சமர்ப்பித்தார்.

இவரது படைப்பு முதலிடம் பெற்று, இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையின் முன்னாள் கமாண்டர் ராகேஷ் சர்மா விருதை வழங்கி பாராட்டினார்.

மாணவர் சிவசூரியா இதே படைப்புக்காக ஏற்கெனவே பல்வேறு பரிசுகள், விருதுகளை பெற்றுள்ளார். சிவசூர்யாவுக்கு ரஷ்யாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

அயல்நாட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன்: விராட் கோலி சாதனை

மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்துச் சாதனை புரிந்தார்.

உணவு இடைவேளையின் போது இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 404 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 200 நாட் அவுட், அஸ்வின் 64 நாட் அவுட்.

இதன் மூலம் அயல்நாட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி.

நேற்று 143 நாட் அவுட் என்று இன்று தொடங்கிய விராட் கோலி கண்கொள்ளாக் காட்சி கவர்டிரைவ்களை தொடர்ந்தார்.

நேற்று 16 பவுண்டரிகள் அடித்திருந்த கோலி இன்று மேலும் 8 பவுண்டரிகளுடன் 281 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்து சாதானை புரிந்தார்.

அனில் கும்ப்ளே கைதட்டினார், மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் கரகோஷம் செய்தார். கோலியின் சாதனைகள் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

காஷ்மீர் சுற்றுலா வேண்டாம்; வெளிநாட்டு பயணிகளுக்கு அறிவுறுத்தல்

புதுடில்லி : காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என வெளிநாட்டு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளனர். தன் நாட்டு குடிமக்கள் காஷ்மீரின் பகல்காம், குல்மார்க், சோனாமார்க் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் காமன்வெல்த் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதே போல் ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை தன் நாட்டு குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனால், அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. சுற்றுலாவுக்காக அடுத்த சில மாதங்களுக்கு செய்யப்பட்டிருந்த புக்கிங்குகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதனால் காஷ்மீரில் சுற்றுலாவை நம்பியுள்ள, ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள், டாக்ஸி ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வியாபாரிகள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Download TamizhNews App to get daily updates in your Mobile: http://app.appsgeyser.com/tamizhnews

இணையதளத்தில் கபாலி வெளியானது எப்படி? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கபாலி திரைப்படம் இணையதளத்தில் வெளியிடுவதற்கு கோர்ட் தடை விதித்த பிறகும் எப்படி வெளியானது என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
கபாலி திரைப்படம் முறைகேடாக இணையதளத்தில் வெளியானது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் "இணையதளத்தில் கபாலி திரைப்படம் வெளியிட கோர்ட் தடை விதித்து இருந்தது. ஆனால், தடையை மீறி கபாலி திரைப்படம் தியேட்டர்களில் வெளியான அரை மணி நேரத்தில் இணையதளத்தில் வெளியானது. இதை தடுக்க மத்திய அரசு தவறியது ஏன்? இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி "கபாலி திரைப்படம் இணையதளத்தில் வெளியிடுவதற்கு கோர்ட் தடை விதித்த பிறகும் எப்படி வெளியானது? இதுதொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

Download TamizhNews App Here: http://app.appsgeyser.com/tamizhnews

ஜெர்மனி வணிக வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: 15 பேர் பலி

பெர்லின்: ஜெர்மனியில் முனிச் நகரில் வணிக வளாகம் ஒன்றில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 15 உயிரிழந்ததாக ஜெர்மன் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.போலீசாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிலவுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

Download TamizhNews App Here: http://app.appsgeyser.com/tamizhnews

ஏ.என்.32 விமானத்தை தேடும் பணியில் தமிழக கடலோர காவல் படை : சைலேந்திர பாபு தகவல்

சென்னை: மாயமான ஏ.என்.32 விமானத்தை தேடும் பணியில் தமிழக கடலோர காவல் படையும் ஈடுபட்டுள்ளதாக ஏடிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை முதல் ராமேஸ்வரம் கடற்கரை பகுதி வரை தேடும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் விமானம் குறித்த தகவல் தெரிந்தால் மீனவர்கள் தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Download TamizhNews App Here: http://app.appsgeyser.com/tamizhnews

Friday, 22 July 2016

காஷ்மீர் மோதலில் ஒருவர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு, ராஜ்நாத் நாளை காஷ்மீர் பயணம்

ஸ்ரீநகர்,  

அமைதியின்மை நிலவிவரும் காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியாகினார், இதனால் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார், மெகபூபாவுடன் ஆலோசனை நடத்துகின்றார். 

காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் நடந்து வருகிறது. வடக்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட அவந்திப்போராவில் மதிய தொழுகைக்குப்பின் ஒரு கும்பல் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தியது. 

அப்போது காஷ்மீர் விடுதலையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் முஸ்தாக் அகமது என்பவர் உயிரிழந்தார். இதற்கிடையே ஏற்கனவே நடந்த வன்முறையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இஸ்தாக் அகமது என்ற வாலிபர் நேற்று காலையில் மரணமடைந்தார். இந்த 2 பேரையும் சேர்த்து காஷ்மீர் வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் அங்கு இதுவரை 50 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

ராஜ்நாத்சிங் காஷ்மீர் பயணம்

இந்நிலையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார், மெகபூபாவுடன் ஆலோசனை நடத்துகின்றார். 

நாளை 11 மணிக்கு ஸ்ரீநகர் சென்றடையும் ராஜ்நாத் சிங் முதலில் அம்மாநில முதல் மந்திரி மெகபூபாவுடன் ஆலோசனை நடத்துகின்றார். பின்னர் மூத்த அதிகாரிகளிடமும் மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக விவாதிக்கிறார். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் முக்கிய நபர்களிடம் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து கூடுதல் தகவல்களை பெற உள்ளார். ஸ்ரீநகரில் நேரு ஓய்வு இல்லத்தில் தங்கும் அவர் பொதுமக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார்.

Download Your Tamizhnews App here http://app.appsgeyser.com/TamizhNews

நாய் குட்டிகளை உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம்: ஐதராபாத்தில் 3 இளைஞர்கள் கைது(விடியோ இணைப்பு)

ஐதராபாத்தில் 3 நாய் குட்டிகளை உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தின் முஷீராபாத் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் 5 இளைஞர்கள் 3 நாய் குட்டிகளை கயிற்றால் கட்டி இழுத்துச் சென்று பிறகு அந்த குட்டிகளை தீ வைத்து உயிருடன் எரிக்கின்றனர். கடந்த சனிக்கிழமை (ஜூலை 16) இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. இந்த விடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதையடுத்து  சம்மந்தப்பட்ட இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விலங்குகள் நல தன் ஆர்வலர்கள் முஷீராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட முஷீரபாத் போலீசார் இதுதொடர்பாக 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர். சமீபத்தில்தான் சென்னையில் நாயை இளைஞர் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து கீழே தூக்கிப்போடுவது போன்ற விடியோ காட்சி வாட்ஸ்-அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவற்றை தொடர்ந்து நாய் குட்டிகளை துன்புறுத்துவது போன்று மேலும் ஒரு விடியோ காட்சி சமூக வளைதளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Download TamizhNewz Android App: http://app.appsgeyser.com/TamizhNews